×

போலாவரம் அணையை கட்ட விடாமல் முதல்வர் ஜெகன்மோகன் தடுக்கிறார்-தெ.தேசம் கட்சி மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு

சித்தூர் : போலாவரம் அணையை கட்ட விடாமல் முதல்வர் ஜெகன்மோகன் தடுக்கிறார் என்று தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் அமைச்சர் அமர்நாத் குற்றம் சாட்டியுள்ளார்.
சித்தூர் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் ‘மினி மாநாடு’ தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில முன்னாள் அமைச்சர் அமர்நாத் தலைமை தாங்கி பேசியதாவது:

என்.டி.ராமராவ் பிறந்து 100 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. அவர் கடந்த 1983ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார். என்.டி.ராமராவ் முதல்வராக பதவியேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்தார். அவரை தொடர்ந்து அக்கட்சியை முன்னாள் முதல்வர் சந்திரபாபு வழி நடத்தி வருகிறார். சந்திரபாபு ஆட்சியில் ஒங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது ஐதராபாத்தில் ஹைடெக் சிட்டியை நிறுவினார். போலாவரம் அணையை கட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார்.

கடந்த 2014ம் ஆண்டு சந்திரபாபு முதல்வராக பதவியேற்று மாநில தலைமை செயலகத்தை அமராவதியில் அமைத்தார். போலாவரம் அணையை கட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். தற்போது போலாவரம் அணையை கட்ட விடாமல் முதல்வர் ஜெகன்மோகன் தடுத்து வருகிறார். சந்திரபாபு முதல்வராக இருந்தபோது சித்தூர் மாவட்டத்தில் சிட்டியை நிறுவினார். அனந்தபூர் மாவட்டத்தில் கார் தொழிற்சாலை அமைத்தார். கடந்த ஆட்சியில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹3 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

சித்தூர் மாவட்டத்தில் செம்மரக்கட்டைகளை இரவோடு, இரவாக கடத்தி பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகின்றனர். டிராக்டர் மணல் ₹4,500 முதல் ₹5,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. 3 தலைமை செயலகம் அமைக்கப்படும் என அராஜக ஆட்சியில் முதல்வர் ஜெகன்மோகன் தெரிவித்து வருகிறார். இவ்வாறு, அவர் பேசினார்.

கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்எல்சி துரைபாபு, மாவட்ட தலைவர் நானி, முன்னாள் மேயர் கட்டாரி ஹேமலதா, மண்டல தலைவர் மோகன்ராஜ், எஸ்சி பிரிவு மாவட்ட தலைவர் பீட்டர், மண்டல தலைவர் மேஷாக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post போலாவரம் அணையை கட்ட விடாமல் முதல்வர் ஜெகன்மோகன் தடுக்கிறார்-தெ.தேசம் கட்சி மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Jeganmohan ,Bolavaram ,Nation Party ,Minister ,Maji ,Chittoor ,CM ,Polavaram ,Telugu Desam Party ,Principal ,Polavaram Dam ,Dinakaran ,
× RELATED ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு ரூ.529 கோடி...