×

சிங்கம்புணரி தாலுகாவில் கோயில் நிலம் என வகைப்படுத்தப்பட்ட இடத்தில் அரசு கட்டடம் கட்ட இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை

சிவகங்கை: சிங்கம்புணரி தாலுகாவில் கோயில் நிலம் என வகைப்படுத்தப்பட்ட இடத்தில் அரசு கட்டடம் கட்ட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் நிலத்தில் அரசு கட்டடம் கட்ட தடை விதிக்க கோரி சிவகங்கையை சேர்ந்த தினகரன், விக்னேஷ் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சிங்கம்புணரி தாலுகாவில் கோயில் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் எந்த கட்டுமான பணியும் நடக்க கூடாது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post சிங்கம்புணரி தாலுகாவில் கோயில் நிலம் என வகைப்படுத்தப்பட்ட இடத்தில் அரசு கட்டடம் கட்ட இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : Singhamburi Thaluga ,Ikord Branch ,Sivagangai ,Ikort Branch ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி...