×

காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்காக சிக்னலில் கோடை பந்தல் திருச்சியில் அசத்தல் முயற்சி

திருச்சி : சுட்டெரிக்கும் வெயிலால் அவதிப்படும் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக திருச்சியில் போக்குவரத்து சிக்னலில் கோடைப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கோடைகாலங்களில் வெயில் சதமடிக்கும் மாவட்டங்களில் திருச்சியும் ஒன்று. நடப்பாண்டு கோடைகாலமான தற்போது கத்திரி வெயில் சுட்டெரித்து வருகிறது. திருச்சி மாநகரில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கடுமையான வெயில் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் பகலில் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை உள்ளது.

அவசியமான பணிகளை முன்னிட்டு இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சென்றாலும் சிறிது நேரம் ஒதுங்கி நிற்க மரங்கள் இல்லை.கார்களில் செல்பவர்கள்தான் வெயிலிலிருந்து தப்பித்துக் கொள்கின்றனர். ஆனால் இரு சக்கர வாகன ஓட்டிகள்தான் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.அதுவும் போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும்போது படும் அவஸ்தயை சொல்ல இயலாது. இந்நிலையில் கலெக்டர் பிரதீப்குமார், வாகன ஓட்டிகளின் வசதிக்காக, சிக்னல்களில் கோடை பந்தல் அமைக்கும்படி போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து திருச்சி (ஒத்தக்கடையிலிருந்து வரும் சாலை) போஸ்ட் ஆபீஸ் சிக்னல் பகுதியில் பரீட்சார்த்த முறையில் 30 அடி நீளத்திற்கு கோடைபந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளதுடன், மாவட்ட நிர்வாகத்தையும், மாநகர போலீசாரையும் பாராட்டி வருகின்றனர். இந்த பந்தலை போல மேலும் சில இடங்களில் அமைக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

The post காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்காக சிக்னலில் கோடை பந்தல் திருச்சியில் அசத்தல் முயற்சி appeared first on Dinakaran.

Tags : Trichy ,Tamil ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...