×

காவல்கிணறு -நாகர்கோவில் 4 வழிச்சாலையில் டாரஸ் லாரிகள் மோதல் டிரைவர் உடல் நசுங்கி பலி

ஆரல்வாய்மொழி : வெள்ளமடம் அருகே காவல்கிணறு -நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் டாரஸ் லாரியின் பின்னால் மற்றொரு டாரஸ் லாரி மோதியதில் டிரைவர் உடல் நசுங்கி பலியானார். சங்கரன்கோவில் சத்திரப்பட்டி தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் முருகானந்தம் (36). இவர் டாரஸ் லாரி ஓட்டி வரகிறார். இவர் நேற்று முன்தினம் திருநெல்வேலியில் இருந்து டாரஸ் லாரியில் பாறைகுண்டு கற்களை ஏற்றிக்கொண்டு கேரளா விழிஞ்ஞம் பகுதிக்கு செல்வதற்காக புறப்பட்டார்.

காவல்கிணறு- நாகர்கோவில் புதிய நான்கு வழிச்சாலையில் டாரஸ் லாரி வந்து கொண்டிருந்தது. வெள்ளமடம் அருகே வரும் போது டாரஸ் லாரியின் முன்பு பாறை குண்டு கற்களை ஏற்றிக் கொண்டு நின்ற இன்னொரு டாரஸ் லாரியில் பயங்கரமாக மோதியது. இதில் முருகானந்தம் ஓட்டி வந்த டாரஸ் லாரியின் முன் பகுதி முழுவதும் சேதமடைந்தது.

இந்த விபத்தில் சிக்கிய முருகானந்தம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். தொடர்ந்து முருகானந்தம் உடலை மீட்க முயன்றனர். இடிபாடில் சிக்கிய அவரது உடலை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. உடனே நாகர்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். டாரஸ் லாரியின் முன் பகுதி முற்றிலும் சேதமானதால் மீட்க முடியவில்லை. இருப்பினும் பல மணி நேரம் போராடி முருகானந்தத்தின் உடலை மீட்டனர். ஆரல்வாய்மொழி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டாரஸ் லாரியை நிறுத்தி இருந்த டிரைவரை சம்பவ இடத்தில் காணவில்லை. அவர் எங்கு சென்றார் என்பதும் தெரியவிலலை. ஆகவே விபத்து எப்படி நடந்தது என்பதை போலீசாரால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. முன் பக்கமாக ஓட்டி வந்த டாரஸ் லாரியை டிரைவர் உடனே நிறுத்தியதால் விபத்து ஏற்பட்டதா? அல்லது ஏற்கனவே அந்த பகுதியில் டாரஸ் லாரி நிறுத்தப்பட்டிருந்ததால் முருகானந்தம் ஓட்டி வந்த டாரஸ் லாரி பின்னால் சென்று மோதியதா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காவல்கிணறு -நாகர்கோவில் 4 வழிச்சாலையில் டாரஸ் லாரிகள் மோதல் டிரைவர் உடல் நசுங்கி பலி appeared first on Dinakaran.

Tags : Taurus ,Vault Nagarko ,Nagarko ,Floodamadam ,
× RELATED ரிஷபம்