×

அனைத்து தரப்பினரும் பங்கெடுக்கும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை: அனைத்து தரப்பினரும் பங்கெடுக்கும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள், அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் கலைஞரின் சாதனைகளை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகள் குறித்து அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு அறிவுரை வழங்கினார். இஸ்லாமியருக்கு 3.5% இடஒதுக்கீடு வழங்கியது, நுழைவுத் தேர்வு ரத்து உள்ளிட்ட பல திட்டங்கள் கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

அனைத்து தரப்பினரும் பங்கெடுக்கும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பல்கலை., கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், பயனடைந்த மக்கள் ஆகியோர் இணைந்து கொண்டாடும் விழாவாக இருக்க வேண்டும் என்றார். நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் நடத்த அரசு சார்பில் குழு அமைக்கப்படும். கலைஞர் நூற்றாண்டு விழா குறித்த விரிவான அரசாணை வெளியிடப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

The post அனைத்து தரப்பினரும் பங்கெடுக்கும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Chennai ,M.K.Stalin ,M.K.Stal ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...