×

பப்புவா நியூ கினியா அரசின் அதிகாரபூர்வ மொழியான டாக் பிசினில் மொழி பெயர்த்த திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

டோக்கியோ: பப்புவா நியூ கினியா அரசின் அதிகாரபூர்வ மொழியான டாக் பிசினில் மொழி பெயர்த்த திருக்குறள் புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஜி-7 கூட்டமைப்பில் உள்ள 7 நாடுகளின் (ஜி-7) உச்ச மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமாவில் தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. மேற்கண்ட 7 நாடுகள் இல்லாது, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேசில், இந்தோனேஷியா, தென் கொரியா, வியட்நாம், கமரோஸ், குக் தீவுகள் ஆகிய நாடுகளுக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்துகொள்ள ஜப்பான் சென்ற பிரதமர், மாநாடு நிறைவடைந்த நிலையில் பப்புவா நியூ கினியா சென்றுள்ள அவர், பப்புவா நியூ கினியா அரசின் அதிகாரபூர்வ மொழியான டாக் பிசினில் மொழி பெயர்த்த திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார். இது குறித்து டிவிட்டரில் பஹிவிட்டுல அவர்; பப்புவா நியூ கினியாவில், டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பெருமை எனக்கும் பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவிற்கும் கிடைத்தது. குறள் ஒரு தலைசிறந்த படைப்பு, இது பல்வேறு துறைகளில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது.

குறளை தோக் பிசின் மொழியில் மொழி பெயர்க்க எடுத்த முயற்சிக்காக மேற்கு புதிய பிரிட்டன் மாகாண ஆளுநர் மற்றும் சுபா சசீந்திரன் ஆகியோரைப் பாராட்டுகிறேன். ஆளுநர் சசிந்திரன் தனது பள்ளி படிப்பை தமிழில் கற்று தேர்ந்துள்ளார். திருமதி சுபா சசிந்திரன், சிறந்த பன்மொழி அறிஞராவார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post பப்புவா நியூ கினியா அரசின் அதிகாரபூர்வ மொழியான டாக் பிசினில் மொழி பெயர்த்த திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Modi ,Papua New Guinea government ,Tokyo ,
× RELATED மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக...