×

திருவாரூரில் தமமுக வடக்கு மாவட்ட குழு கூட்டம்

 

திருவாரூர், மே 22: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மாவட்ட குழு கூட்டம் திருவாரூரில் மாவட்ட செயலாளர் ரஜினி பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் சதீஷ் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில்அடுத்த மாதம் 25ந் தேதி திருவாரூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு வருகை தரும் கட்சியின் தலைவர் ஜான் பாண்டியனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதுமற்றும் தேவேந்திரன் குல வேளாளர் இனத்தவர்களை பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றிட வேண்டும் மற்றும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கினை அமல்படுத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

The post திருவாரூரில் தமமுக வடக்கு மாவட்ட குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu North District Committee ,Tiruvarur ,Tamil Nadu People's Development Kazhagam ,Tamamuga Northern District Committee meeting ,Dinakaran ,
× RELATED ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குள்...