×

வலங்கைமானில் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

 

வலங்கைமான், மே 22: வலங்கைமானில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.வலங்கைமானில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் குலாம்மைதீன் தலைமை வகித்தார். காங்கிரஸ் வட்டார தலைவர் சத்தியமூர்த்தி உருவ படத்திற்கு மாலை அணிவித்தார். இதில் அந்தோணிசாமி, கண்ணன், மருதமுத்து, உமா மகேஸ்வரி நகர மாணவர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ் மற்றும் பொது மக்கள் ராஜீவ் காந்தி உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

The post வலங்கைமானில் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi Memorial Day ,Valangaiman ,Former ,Valangaiman.Tamil ,Nadu Congress Union ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை