மயிலாடுதுறை, மே 22: மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் பாரதபிரதமர் ராஜீவ்காந்தியின் 32வது நினைநாளையொட்டி மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் எம்.எல்.ஏ.ராஜகுமார் தலைமையில் காங். கட்சியினர் பொறையார் ராஜீவ்புரம், மயிலாடுதுறை ராஜன்தோட்டம் சாய் விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி திருவுருவலச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மயிலாடுதுறை ராஜன்தோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் எம்.எல்.ஏ.ராஜகுமார் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணைசொக்கலிங்கம் உட்பட பலர் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல் காங்கிரஸ் இலக்கிய அணி மாநில பொதுச்செயலாளர் கவிஞர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவரது படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அமிர்தராஜா தலைமை வகித்தார். இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாவட்ட துணை தலைவர்கள் ராஜசேகர், ஜலாலுதீன், நாகப்பட்டினம் நகர தலைவர் உதயசந்திரன், நகர துணை தலைவர் முகம்மது நத்தர், பொதுச் செயலாளர்கள் ரபீக், தெய்வானை, திருமருகல் வட்டார தலைவர் சுரேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post நினைவு நாளையொட்டி ராஜீவ்காந்தி சிலைக்கு காங்கிரசார் மாலை appeared first on Dinakaran.
