×

பாதை பிரச்னையில் தந்தை,மகனுக்கு அரிவாள் வெட்டு

திருப்புவனம், மே 22: டி.ஆலங்குளத்தில் நடைபாதையை ஆக்கிரமித்த பிரச்னை குறித்து தட்டி கேட்ட விவசாயியை அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்தார். திருப்புவனம் அருகே டி.ஆலங்குளத்தைச் சேர்ந்த மூலலிங்கம்(62) வீட்டிற்கு செல்லும் பொது நடைபாதையை அதே ஊரை சேர்ந்த திருநாவுக்கரசு கற்களை போட்டு அடைத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் பலமுறை தகராறு நடந்துள்ளது. இதே கிராமத்தில் பலரும் பொது இடங்களிலும் புறம்போக்கு இடங்களிலும் தெருக்களிலும் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியும், வேலி அமைத்தும் ஆக்கிரமித்துள்ளனர்.

இதுகுறித்து தாசில்தாரிடம் கிராமமக்கள் சார்பாக மூலலிங்கம் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது உறவினர்கள் கலா,சுகுமாறன், முத்து உள்ளிட்டோர் மூலலிங்கத்தையும் அவரது மகன் முனீஸ்வரனையும் அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்தனர். அவர்கள், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post பாதை பிரச்னையில் தந்தை,மகனுக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Tiruppuvanam ,D. Alankulam ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை