சிவகங்கை, மே 22: சிவகங்கை அரண்மனைவாசல் முன் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32வது நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன், சுந்தரம் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் பழனியப்பன், மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், வட்டாரத்தலைவர் சோணைமுத்து, நிர்வாகிகள் கண்ணன், வீரகாளை, பார்வதிபாலு, துரைபிரபு, பூக்கடைபாண்டி, விக்னேஷ், ராம்குமார், பாண்டி, முத்துவேல், குரு.கணேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
திருப்புத்தூர் காந்தி சிலை அருகே ராஜீவ் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் எஸ்.எம்.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், கல்லல் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் நாராயணன், கல்லல் வட்டார காங்கிரஸ் தலைவர் இருதயராஜ், எஸ்.புதூர் வட்டார காங்கிரஸ் தலைவர் தேனன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
The post ராஜீவ் நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.
