×

அன்னூர் கைகாட்டியில் ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு காங்கிரசார் மலர் தூவி மரியாதை

 

அன்னூர், மே 22: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கைகாட்டியில் வட்டார தலைவர் கதிர்வேல் தலைமையில் திரண்ட வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், அன்னூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் மதிய உணவு வழங்கினர். மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை ஊர்வலமாக சென்று வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி தலைவர் சௌந்தரராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் காளிச்சாமி, நகர தலைவர் அறிவழகன், பேரூராட்சி கவுன்சிலர் புவனேஸ்வரி அறிவழகன், சிறுபான்மையினர் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல் கரீம், பொருளாளர் கார்த்திகேய சர்மா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

The post அன்னூர் கைகாட்டியில் ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு காங்கிரசார் மலர் தூவி மரியாதை appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi ,Annoor Kaigatti ,Annoor ,Coimbatore district ,Kaikati ,
× RELATED உருட்டுக்கட்டையால் பொதுமக்களை...