சேத்தியாத்தோப்பு : கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை பேருந்து நிறுத்த பகுதியில் நேற்று ஒரு கண்டெய்னர் லாரி வந்தது. ஆனால் அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. மேலும் கண்டெய்னரிலிருந்து தண்ணீர் சொட்டியது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் கண்டெய்னரை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் கண்டெய்னரை சேத்தியாத்ேதாப்பு காவல்நிலையம் கொண்டு செல்லுமாறு கூறினர். ஆனால் நீண்ட நேரமாக தாமதப்படுத்திய டிரைவர் வேறு வழி இல்லாமல் காவல்நிலையம் கொண்டு சென்றார்.
அங்கு டிரைவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் கண்டெய்னரில் கோழி இறைச்சி கழிவுகள் இருப்பதாகவும், கும்பகோணத்தில் இருந்து ஆந்திராவுக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தார். ஆனால் கடும் துர்நாற்றம் வீசியதால் கண்டெய்னரை போலீசார் திருப்பி அனுப்பினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த கண்டெய்னரில் கோழி கழிவுகள் உள்ளது.
ஆனால் போலீசார் வாகனத்தை சோதனை செய்யாமலும், நடவடிக்கை எடுக்காமலும் திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படும். ஆந்திரா கொண்டு செல்கிறோம் என்று கூறிவிட்டு தமிழ்நாட்டில் ஏதோ ஒரு இடத்தில் இந்த கழிவுகள் கொட்டப்படலாம். போலீசார் இதனை தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.
The post கோழி கழிவு ஏற்றிச்சென்ற கண்டெய்னரை மடக்கி போலீசில் ஒப்படைத்த மக்கள் appeared first on Dinakaran.