×

பொன்னம்பலமேட்டில் பூஜை மேலும் ஒருவர் கைது

திருவனந்தபுரம்: சபரிமலை பொன்னம்பல மேட்டில் அத்துமீறி நுழைந்து பூஜை செய்தது தொடர்பாக மேலும் ஒருவரை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். சபரிமலையில் மகரஜோதி ஏற்றப்படும் பொன்னம்பலமேட்டிற்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது. இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொன்னம்பலமேட்டில் சிலர் அத்துமீறி நுழைந்து பூஜை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வனத்துறையும், போலீசும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சென்னையில் வசிக்கும் நாராயணன் என்பவரது தலைமையில் பூஜை நடந்தது தெரியவந்தது.

வனத்துறை ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரம் பணம் கொடுத்து இவர்கள் பொன்னம்பலமேட்டில் நுழைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறை ஊழியர்களான ராஜேந்திரன், சாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசாரும், வனத்துறையினரும் தேடி வந்தனர். இந்தநிலையில் குமுளியை சேர்ந்த சந்திரசேகரன் என்ற கண்ணனை இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் வைத்து வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். இவர்தான் நாராயணனுக்கு வனத்துறை ஊழியர்களை அறிமுகம் செய்து வைத்து உள்ளார். அவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பொன்னம்பலமேட்டில் பூஜை மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Ponnambalamed ,Thiruvananthapuram ,Sabarimala Ponnambalamet ,
× RELATED திருவனந்தபுரம் அருகே சாலையில்...