×

கிராமம் கிராமமாக டாஸ்மாக் கொண்டு வந்தவர் எடப்பாடி: மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றச்சாட்டு

விருதுநகர்: கிராமம், கிராமமாக டாஸ்மாக் கடைகளை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி என மாணிக்கம் தாகூர் எம்பி குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நினைவுநாளையொட்டி அவரது படத்திற்கு எம்.பி மாணிக்கம் தாகூர் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: 2016ல் கருப்பு பணத்தை அழிப்பதற்காக 2 ஆயிரம் ரூபாய் கொண்டு வரப்படுவதாக மோடி தெரிவித்தார். அப்போது ராகுல்காந்தி, ஆயிரத்தை அழித்து 2 ஆயிரம் கொண்டு வந்தால் எப்படி கருப்பு பணம் ஒழியும் என்று கேள்வி எழுப்பினார். தற்போது பாஜ ரூ.2 ஆயிரத்தை ஒழிப்பதாக கூறுவது, பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கூறி உள்ளனர்.

கர்நாடகா தோல்வியை மறைக்க தான் ரூ.2 ஆயிரம் திரும்ப பெறும் முடிவை அறிவித்திருப்பதாக தமிழ்நாடு முதல்வர் கூறியிருப்பது சரியான கணிப்பு தான். தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி மதுவை ஒழிக்க வேண்டும் என போராடப்போவது இல்லை. ஏனென்றால் தமிழ்நாட்டில் டாஸ்மாக்கை கிளை, கிளையாக கிராமம் தோறும் உருவாக்கிய பெருமை எடப்பாடி பழனிசாமியையே சேரும். அவரது சாதனையால் தான் அதிக எண்ணிக்கையிலான கடைகள் திறக்கப்பட்டது. இது ஊர் அறிந்த உண்மை. எடப்பாடி ஆட்சியில் கிராமம் தோறும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடும் வேலையை திமுக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post கிராமம் கிராமமாக டாஸ்மாக் கொண்டு வந்தவர் எடப்பாடி: மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Edapadi ,Tasmak ,Gem Thakur ,M. ,Virudhunagar ,Edapadi Palanisamy ,Gem Thakur M. B. ,Dinakaran ,
× RELATED டாஸ்மாக் கடை இடமாற்றம் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு