×

கிண்டி, செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தலைமை செயலாளர் ஆய்வு

சென்னை: கிண்டி மற்றும் செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 தரத்திலான நவீன தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டம் ரூ.2877.43 கோடி செலவினத்தில் டாடா டெக்னாலஜீஸ் லிட்., நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. 5 நீண்டகால மற்றும் 23 குறுகிய கால புதிய தொழிற்பிரிவுகளில் பயிற்சி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்திட்டத்திற்கான பணிமனை கட்டடங்கள் அமைத்திட ஒவ்வொரு நிலையத்திற்கும் தலா ரூ.3.73 கோடி வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டாடா டெக்னாலஜீஸ் லிட்., நிறுவனத்துடன் இணைந்து ஒவ்வொரு அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலும் ரூ.31.00 கோடி செலவில் ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில் கிண்டி மற்றும் செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார். இத்திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முடிவுறும் தருவாயில் உள்ளதாகவும், செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முடிவு பெற்று துவக்க விழாவிற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டம் அமல்படுத்தப்படும் அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் கட்டுமானப் பணிகள் ஜூன் 30ம் தேதிக்குள் முடிக்கப்படும்.

The post கிண்டி, செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தலைமை செயலாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kindy ,Chengalputtu ,Government ,Vorational Station ,Chennai ,Chief Secretary ,Variyanpu ,Kindi ,Chengalpattu Government Votorational Centres ,Tamil Nadu Chief Minister's Commission ,Chengalputtu Government Vorational Training Station ,Dinakaran ,
× RELATED சென்னையில் 18 மெட்ரோ ரயில்...