×

கிண்டி, செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை ஆய்வு செய்தார் தலைமைச்செயலாளர் இறையன்பு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் தொழிற்பிரிவுகளில் பயிற்சி 4.0 வழங்கிட தரத்திலான நவீன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டம் ரூ.2877.43 கோடி செலவினத்தில் டாடா டெக்னாலஜீஸ் லிட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. 5 நீண்டகால மற்றும் 23 குறுகிய கால புதிய தொழிற்பிரிவுகளில் பயிற்சி 01.08.2023 முதல் தொடங்கவுள்ளது.

இத்திட்டத்திற்கான பணிமனை கட்டடங்கள் அமைத்திட ஒவ்வொரு நிலையத்திற்கும் தலா ரூ.3.73 கோடி வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டாடா டெக்னாலஜீஸ் லிட்., நிறுவனத்துடன் இணைந்து ஒவ்வொரு அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலும் ரூ.31 கோடி செலவில் ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறுவப்பட்டுள்ளதனை கிண்டி மற்றும் செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு செய்யப்பட்டது.

இத்திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முடிவுறும் தருவாயில் உள்ளதாகவும், செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முடிவு பெற்று துவக்க விழாவிற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டம் அமல்படுத்தப்படும் அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் கட்டுமானப் பணிகள் 30.06.2023 க்குள் முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வின் போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் கொ.வீர ராகவ ராவ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், பொதுப்பணித் துறை, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கிண்டி, செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை ஆய்வு செய்தார் தலைமைச்செயலாளர் இறையன்பு appeared first on Dinakaran.

Tags : Kindy ,Chengalpadu ,Government Vocational Centres ,Chief Secretary ,Praiyanu ,Chennai ,Chief Minister of ,Tamil Nadu ,and Training Department ,Chengalputtu ,Diyanbu ,Dinakaran ,
× RELATED சென்னையில் 18 மெட்ரோ ரயில்...