×

அரசாணை வெளியான 10 நாளில் திருப்பத்தூரில் முதன்முறையாக 51 நரிக்குறவர் குருவிக்காரர்களுக்கு எஸ்டி சான்று

திருப்பத்தூர்: தமிழகத்தில் உள்ள நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்தார். அதை ஒன்றிய அரசு ஏற்று உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு கடந்த 5ம் தேதி வெளியிட்ட அரசாணை 63ல் நரிக்குறவர், மற்றும் குருவிக்காரர் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் (எஸ்டி) சான்று வழங்க உத்தரவிடப்பட்டது. அரசாணை வெளியான 10 நாளில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் டிஆர்ஓ லட்சுமி, தாசில்தார் சிவப்பிரகாசம் ஆகியோர் திருப்பத்தூர் இதய நகர் பகுதியில் 51 நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் இன மக்களுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்கினர். இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில், ‘மற்றவர்களும் அந்தந்த ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பித்து சான்றிதழ்களை பெறலாம்’ என்றார்.

The post அரசாணை வெளியான 10 நாளில் திருப்பத்தூரில் முதன்முறையாக 51 நரிக்குறவர் குருவிக்காரர்களுக்கு எஸ்டி சான்று appeared first on Dinakaran.

Tags : Thirupathur ,ST. ,Tiruppattur ,Chief Minister of ,CM ,Narikiravar ,Guruvikara ,Tamil Nadu ,G.K. Stalin Union ,
× RELATED திருப்பத்தூரில் காலாவதியான குளிர்பானங்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்