×

பட்டு கூட்டுறவு உற்பத்தியாளர் சங்க இயக்குனர்கள் ராஜினாமா

சேலம்: காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு, தமிழ்நாடு பட்டு கூட்டுறவு உற்பத்தியாளர்கள் இணையம் (டான்சில்க்) செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 21 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், தர்மபுரி மாவட்ட பட்டு நூற்பு தொழில் சேவை கூட்டுறவு சங்க தலைவர் வெங்கட்ராமன், கோவை மாவட்ட பட்டு நூற்பு தொழில் கூட்டுறவு சங்க தலைவர் துரைசாமி, காஞ்சிபுரம் அசனம்மா பேட்டை ஸ்ரீராமநாத ஈஸ்வரர் பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் செந்தில்ராஜ்குமார் மற்றும் ஜோதி, அனிதா ஆகிய 5 பேர், நேற்று முன்தினம் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள அலுவலகத்திற்கு வந்து, அங்கிருந்த பட்டு வளர்ச்சித்துறை இயக்குனர் விஜயா ராணியை சந்தித்து, தங்களது இயக்குனர் பதவியை, சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக கூறி, அதற்கான கடிதத்தை வழங்கினர். மொத்தம் உள்ள 21 நபர்களில், 7 பேரின் பதவி காலம் முடிந்துவிட்டது. மீதி உள்ள 14 பேரில் தற்போது 5 இயக்குனர்கள் ராஜினாமா செய்து விட்டதால், மீதம் 9 பேர் மட்டுமே உள்ளனர். இது குறித்து ராஜினாமா செய்த இயக்குனர்கள் கூறுகையில், ‘‘பெரும்பாலான இயக்குனர்கள் ராஜினாமா செய்துவிட்டதால், கூட்டுறவு சங்கத்தை கலைத்து விட்டு, புதிய இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்,’ என்றனர்.

The post பட்டு கூட்டுறவு உற்பத்தியாளர் சங்க இயக்குனர்கள் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Silk Co-operative Manufacturer's Union ,Salem ,Kanchipuram, Tamil Nadu ,Silk Co-operative Manufacturers Internet ,Dansilk ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...