×

கோடை விழாவின் ஒரு பகுதியாக ஊட்டியில் பலூன் திருவிழா துவக்கம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில், கோடை விழாவை முன்னிட்டு ஊட்டியில் பலூன் திருவிழா நேற்று துவங்கியது. சுற்றுலா துறை மற்றும் தனியார் இணைந்து நடத்தும் இவ்விழா மே 31ம் தேதி வரை நடக்கிறது. இதனை சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்து பேசுகையில்,‘‘ ராட்சத பலூனில் சுற்றுலா பயணிகள் பயணிக்கலாம். ஏற்கனவே, பொங்கல் பண்டிகையின் போது சுற்றுலா துறை மற்றும் தனியார் சார்பில் பொள்ளாச்சியில் இந்த பலூன் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது, ஊட்டியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இவ்விழாவில், 2 ராட்சத பலூன்களில் சுற்றுலா பயணிகள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

The post கோடை விழாவின் ஒரு பகுதியாக ஊட்டியில் பலூன் திருவிழா துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Balloon Festival ,Oodi ,Feedi ,Nilgiri ,Ooty ,Summer Festival ,
× RELATED பொள்ளாச்சியில் சர்வதேச பலூன்...