×

RTE: மாணவர்களுக்கு சீருடை, பாட நூல் தருவது அரசின் கடமை: ஐகோர்ட்

சென்னை: கட்டாய கல்வி உரிமை சட்ட 25% ஒதுக்கீட்டில் தனியார் பள்ளியில் சேருவோருக்கு சீருடை, பாட நூல் தருவது அரசின் கடமை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கான சீருடை, பாடப் புத்தகங்களுக்கான கட்டணங்களை வழங்க வேண்டியது அரசின் கடமை என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. குடியாத்தம் அருகே மெட்ரிக் பள்ளியில் சேர்க்கை பெற்ற மாணவருக்கு சீருடை, நூல் தர கட்டணம் கோரியது நிர்வாகம். அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை 2 வாரத்தில் பிறப்பிக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 25% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

The post RTE: மாணவர்களுக்கு சீருடை, பாட நூல் தருவது அரசின் கடமை: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : RTE ,iCort ,Chennai ,Government ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளியில் ஆர்.டி.ஈ. சேர்க்கை இன்று தொடக்கம்..!!