×

11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் செம்போடை அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

நாகப்பட்டினம்,மே20: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 5ம் தேதி வரை 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 221 மாணவர்களும், 3 ஆயிரத்து 942 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 163 பேர் 11ம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். இதில் 2, ஆயிரத்து 571 மாணவர்களும், 3 ஆயிரத்து 520 மாணவிகளும் என மொத்தம் 6 ஆயிரத்து 91 பேர் தேர்ச்சிபெற்றனர். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 85.03 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டை விட 1.54 சதவீதம் குறைவு ஆகும். கடந்த ஆண்டு 86.57 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் செம்போடை அரசு மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அதேபோல 10 அரசு உதவி பெறும் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் செம்போடை அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Sempodai Government School ,Nagapattinam ,Sembodai Government School ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு, தனியார் ஐடிஐ-ல் மாணவர்கள் சேர்க்கை