×

அதியமான்கோட்டம் புனரமைக்கும் பணி

 

தர்மபுரி, மே 20: தர்மபுரி அருகே அதியமான் கோட்டத்தை புனரமைக்கும் பணிகள் மற்றும் புதிய நூலகம் அமைக்கும் பணிகளை, கலெக்டர் சாந்தி நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். நல்லம்பள்ளி தாலுகா, அதியமான் கோட்டை ஊராட்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வள்ளல் அதியமான் கோட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது. வள்ளல் அதியமான் கோட்டத்தை புனரமைத்து மேம்படுத்திடும் வகையில், பொதுப்பணித் துறையின் சார்பில், ரூ.1 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ₹49 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

நேற்று கலெக்டர் சாந்தி, வள்ளல் அதியமான் கோட்டம் புனரமைக்கப்படும் பணிகள் மற்றும் இவ்வளாகத்தில் கட்டப்பட்டு வரும் நூலக கட்டிடத்தையும், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்தும் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சண்முகம், பிஆர்ஓ லோகநாதன், பிடிஓ லோகநாதன், ஊரக வளர்ச்சி முகமை உதவி பொறியாளர் சுகுணா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post அதியமான்கோட்டம் புனரமைக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Adiyamgotam ,Darmapuri ,Athiyaman Fort ,HyamanGotam ,Dinakaran ,
× RELATED தர்மபுரி அருகே பரபரப்பு கோவை நகைக்கடை...