×

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது நடவடிக்கை

 

சூலூர், மே 20: கோவை மாவட்டம் சூலூர் அருகம்பாளையம் பகுதியில் 15 வயது சிறுமிக்கும் 24 வயது வாலிபருக்கும் திருமணம் நடைபெறுவதாக மாவட்ட சமூக நலத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சமூக நலத்துறை அதிகாரிகள் அருகம்பாளையம் பகுதியில் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அருகம்பாளையத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், கரவழி மாதப்பூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பாலசுப்ரமணியன் (24) என்பவருக்கும் கடந்த 5 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது உறுதி செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து இருவரையும் சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்த சமூக நலத்துறை அதிகாரிகள் குழந்தை திருமணம் தொடர்பாக பாலசுப்மணி மீது சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு புகாரை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

The post சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Sulur ,Arugambalayam ,Coimbatore ,Dinakaran ,
× RELATED சூலூர் அருகே சமையல் தொழிலாளி அடித்துக்கொலை