×

மாற்றுத்திறனாளி மாணவி சாதனை

 

பாம்பன் அருகில் அக்காள் மடம் தெரசாள் நகரில் வசித்து வருபவர் டென்சிங். படகு ஓட்டுனராக வேலை பார்த்து வரும் இவரின் மகள் க்யூமிஜெனிஸ் ராமேஸ்வரம் மெய்யம்புளியில் உள்ள கிங் ஆப் கிங்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறு வயதில் இருந்தே இரண்டு கால்களும் நிற்க நடக்க முடியாத மாற்றுத்திறனாளி மாணவியான இவர் வீல்சேர் உதவியுடன் பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இவர் 500 க்கு 493 மதிப்பெண் பெற்று ராமநாதபுரம் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்ற சாதனை படைத்துள்ளார். தமிழ் 96, ஆங்கிலம் 99, கணக்கு 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 99 மதிப்பெண்கள் பெற்று ராமேஸ்வரம் தீவு அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ள மாணவி க்யூமிஜெனிசை பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகத்தினர், சகமாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

The post மாற்றுத்திறனாளி மாணவி சாதனை appeared first on Dinakaran.

Tags : Densing ,Akkal Month Teresal ,Bomban ,Dinakaran ,
× RELATED 36 ஆண்டுகளாக பக்தர்கள் ஆவலுடன்...