×

திண்டுக்கல் ஜங்ஷனில் ஆதரவற்று திரிந்த 2 பேர் மீட்பு

திண்டுக்கல், மே 20: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில் சிறப்பு எஸ்ஐ மணிகண்டன், தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ்குமார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 ஆண்கள் அழுக்கடைந்த ஆடைகளுடன் சுற்றி திரிந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்த சேதுராம்ன் (43), அவனியாபுரத்தை சேர்ந்த சக்திவேல் (40) என்பதும், ரயில் பயணிகளிடம் யாசகம் பெற்று வாழ்வதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இருவருக்கும் புதிய ஆடைகள் மற்றும் உணவு வாங்கி கொடுத்தனர். பின்னர் போலீசார் இருவருக்கும் அறிவுரை கூறி திண்டுக்கல் பாரதிபுரத்திலுள்ள நகர்ப்புற காப்பகத்தில் ஒப்படைத்தனர். தற்போது வரை திண்டுக்கல், பழநி, கொடைரோடு ரயில்வே போலீசார் குடும்பங்களில் இருந்து கைவிடப்பட்ட 15 பேரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post திண்டுக்கல் ஜங்ஷனில் ஆதரவற்று திரிந்த 2 பேர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Dindigul Junction ,Dindigul ,Dindigul Railway Station ,Inspector ,Thuyamani Valladichamy ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை