×

மைனசும் மைனசும் சேர்ந்தால் பிளஸ் என்பதை நிரூபிப்போம்… இன்னும் 20 நாளில் அதிமுக, இரட்டை இலை சின்னம் எங்கள் பக்கம் வரும்: வைத்திலிங்கம் பேட்டி

தர்மபுரி: இன்னும் 20 நாளில் அதிமுக, இரட்டை இலை சின்னம் எங்கள் பக்கம் வரும் என்று முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் அணி இணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் கூறினார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஓபிஎஸ் அணியின், செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், இணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். ஆனால் எடப்பாடி பழனிசாமி, தான் மட்டும் தலைமை பொறுப்பு வகிக்க வேண்டும். தனக்கே கட்சியை உரித்தாக்கி கொள்ள வேண்டும் என திட்டமிட்டு வருகிறார்.

நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.இன்னும் 20 நாளில் அதிமுக, இரட்டை இலை சின்னம் எங்கள் பக்கம் வரும். சாதாரண அமைச்சராக இருந்த போது, எடப்பாடி பழனிசாமி, ஞாபகத்தோடு இருந்தார். முதலமைச்சரான பிறகு அவருக்கு புத்தி பேதலித்து விட்டது. அதிமுக கொடியை கட்டக்கூடாது என நீதிமன்றம் கூறவில்லை. நாங்கள் கொடியை கட்டுவோம். நாங்கள் வழக்கை தொடுப்போம். அந்த வழக்கை அவர்கள் சந்திக்கட்டும். நாங்களும் சந்திக்க தயாராக உள்ளோம். சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அனைவரும் மைனஸ் என்கின்றனர். ஆனால், மைனசும் மைனசும் சேர்ந்தால் தான் பிளஸ் என்பதை நாங்கள் நிரூபிப்போம். இவ்வாறு வைத்திலிங்கம் தெரிவித்தார்.

The post மைனசும் மைனசும் சேர்ந்தால் பிளஸ் என்பதை நிரூபிப்போம்… இன்னும் 20 நாளில் அதிமுக, இரட்டை இலை சின்னம் எங்கள் பக்கம் வரும்: வைத்திலிங்கம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Darmapuri ,OPS ,
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி