×

கிரெடிட் கார்டு வெளிநாட்டு பயன்பாட்டுக்கு 20% வரி: ஒன்றிய அரசு விளக்கம்

புதுடெல்லி: கிரெடிட் கார்டுகளின் சர்வதேச பயன்பாட்டுக்கான வரி குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியர்கள் தங்களது கிரெடிட் கார்டை வெளிநாடுகளில் பயன்படுத்துவதற்கான வரியை(டிசிஎஸ்) 20 சதவீதமாக அதிகரிப்பதாகவும் ஜூலை 1ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என ஒன்றிய நிதியமைச்சகம் நேற்று முன்தினம் அறிவித்தது.அந்நிய செலாவணி மேலாண்மை விதிகள்,தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின்(எல்ஆர்எஸ்) கீழ் சர்வதேச கிரெடிட் கார்டு பேமண்ட்கள் உள்ளடங்கும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினர் அரசை விமர்சித்திருந்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு நேற்று விளக்கம் அளித்துள்ளது.

அதில், ஒருவர் வெளிநாட்டுக்கு வியாபார சுற்றுபயணம் செல்லும் போது தன்னுடைய கிரெடிட் கார்ட் வாயிலாக செய்யும் செலவுகள் எல்ஆர்எஸ் கீழ் சேர்க்கப்படாது. ஆனால் 20 சதவீதம் வரி (டிசிஎஸ்) பொருந்தும். இந்தியாவில் இருந்துகொண்டு ஒருவர் நெட்பிளிக்ஸ் பேமெண்ட், வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து சாப்ட்வேர் வாங்குவது போன்றவற்றின் செலவுகள் எல்ஆர்எஸ் கீழ் சேர்க்கப்படாது. ஆனால் 20 சதவீதம் வரி (டிசிஎஸ்) பொருந்தும் என தெரிவித்துள்ளது. மேலும் கல்வி செலவுகளை வங்கி மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் கடன் பெற்று வெளிநாட்டில் பேமெண்ட் செய்யும் போது அதற்கு தற்போது இருக்கும் 0.5 சதவீத டிசிஎஸ் ஜூலை 1 ஆம் தேதிக்கும் பின்பும் தொடரும். இதற்கு ரூ. 7 லட்சம் வரையில் மட்டுமே அனுமதி உண்டு என தெரிவித்துள்ளது.

The post கிரெடிட் கார்டு வெளிநாட்டு பயன்பாட்டுக்கு 20% வரி: ஒன்றிய அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Union ,New Delhi ,Union Government ,Indians ,Dinakaran ,
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...