×

எரிசக்தித் துறை சார்பில் ரூ.2,003 கோடியில் 6 புதிய துணை மின் நிறுவனம் உள்பட பல்வேறு புதிய திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: எரிசக்தித் துறை சார்பில் ரூ.2,003 கோடியில் நிறுப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் பல்வேறு திட்ட செயல்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் தொழிற்துறை, விவசாயம், வணிகம், தகவல் தொழில்நுட்ப மையங்கள், மெட்ரோ இரயில் திட்டங்கள், மின்சார வாகன மின்னூட்ட நிலையங்கள் ஆகியவற்றினை கருத்திற் கொண்டு, வளர்ச்சிக்கு தேவையான மின்சாரத்தை தடையில்லாமல் வழங்கிடவும், மேலும், காற்று மற்றும் சூரியசக்தி மூலம் பெறப்படும் பசுமை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்திடவும், புதிய துணை மின் நிலையங்கள் அமைத்தல், துணை மின் நிலையங்களின் தரம் உயர்த்துதல், இயக்கத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் புதிய விகிதாசார அறிமுகம் மற்றும் இயக்கத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் கூடுதல் திறனுள்ள மின் மாற்றிகள் நிறுவுதல் போன்ற பணிகளை தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், ரூ.1859 கோடியே 12 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்களையும், ரூ.143 கோடியே 88 லட்சம் செலவில் 65 துணை மின் நிலையங்களில் 853 எம்.வி.ஏ அளவிற்கு திறன் மேம்படுத்தப்பட்ட 67 மின் மாற்றிகளின் செயல்பாட்டினையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

புதிதாக நிறுவப்பட்டுள்ள 16 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தல்: அந்த வகையில், சென்னை மாவட்டம் – புளியந்தோப்பில் புதிய 400 கி.வோ வளிமகாப்பு துணை மின் நிலையம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் – அரசூர் ஆகிய இடங்களில் 94 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்ட ஏழு புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்கள்; செங்கல்பட்டு மாவட்டம் – புதுப்பாக்கம்; சென்னை மாவட்டம் – ஆழ்வார்திருநகர்; காஞ்சிபுரம் மாவட்டம் – மாத்தூர்; திருவள்ளூர் மாவட்டம் – திருமலைவாசன் நகர் உள்பட ஏழு புதிய 33/11 கி.வோ துணை மின் நிலையங்கள் என மொத்தம் ரூ.1,859 கோடியே 12 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்கள்.

65 துணை மின் நிலையங்களில் திறன் மேம்படுத்தப்பட்ட 67 மின் மாற்றிகளின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தல்: செங்கல்பட்டு மாவட்டம் – இந்தளூர் காஞ்சிபுரம் மாவட்டம் – பள்ளிக்கரணை, ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்; திருவள்ளூர் மாவட்டம் – திருத்தணி, திருவள்ளூர், பட்டாபிராம், கும்மிடிப்பூண்டி சிப்காட் – தேர்வாய்கண்டிகை, மப்பேடு, ஆகிய இடங்களில் உள்ள 65 துணை மின் நிலையங்களில் ரூ.143 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் 67 மின் மாற்றிகளின் திறனை கூடுதலாக 853 எம்.வி.ஏ உயர்த்தி, அவற்றின் செயல்பாட்டினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் இறையன்பு, எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மணிவண்ணன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இயக்குநர் (பகிர்மானம்)சிவலிங்கராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post எரிசக்தித் துறை சார்பில் ரூ.2,003 கோடியில் 6 புதிய துணை மின் நிறுவனம் உள்பட பல்வேறு புதிய திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Energy Department ,Chief Minister ,B.C. G.K. Stalin ,Chennai ,Department of Energy ,M.D. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...