×

தங்கம் விலை தொடர் சரிவு 3 நாளில் சவரனுக்கு ரூ.720 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. தொடர்ந்து 3 நாகளில் மட்டும் சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை அதிரடியாக உயர்ந்தால், சில தினங்களில் குறையும். அதே நேரத்தில் தங்கம் விலை தினம், தினம் புதிய உச்சம் தொட்டு சாதனை படைத்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 5ம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ.46,200 விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை நிகழ்த்தியது.

இந்நிலையில் கடந்த 16ம் தேதி ஒரு சவரன் ரூ.45,720க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. 17ம் தேதி அன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.45,360க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,650க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.45,200க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.5,625க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.45,000க்கும் விற்பனையானது. நீண்ட மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை சவரன் ரூ.45 ஆயிரத்துக்குள் வந்துள்ளது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 3 நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

The post தங்கம் விலை தொடர் சரிவு 3 நாளில் சவரனுக்கு ரூ.720 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sowaran ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...