சென்னை: ஆவடி போலீஸ் கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலம் முழுவதும் 39 போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் 8 மாவட்டங்களுக்கு புதிய எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு 4 ஏடிஜிபிக்கள், டிஜிபிக்களாகவும், 5 கூடுதல் எஸ்பிக்கள் எஸ்பிக்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இது குறித்து உள்துறைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவு: மத்திய அரசுப் பணியான இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புபடையின் ஏடிஜிபியாக உள்ள ராஜீவ்குமார், டிஜிபியாக பதவி உயர்வு பெற்று அதே பணியில் தொடருவார். ஆவடி கமிஷனராக உள்ள சந்தீப் ராய் ரத்தோர், பதவி உயர்வு பெற்று போலீஸ் பயிற்சிக் கல்லூரி மற்றும் போலீஸ் அகாடமியின் இயக்குநராகவும், லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக உள்ள அபய்குமார் சிங், பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் இயக்குநராகவும், மின்வாரிய விஜிலன்ஸ் ஏடிஜிபியாக உள்ள வன்னியப்பெருமாள், அதே பிரிவில் டிஜிபியாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
சிவில் சப்ளை ஏடிஜிபியாக உள்ள அருண், ஆவடி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். பூக்கடை துணை கமிஷனராக உள்ள ஆல்பர்ட் ஜான், திருப்பத்தூர் எஸ்பியாகவும், மாநில குற்ற ஆவணக் காப்பக எஸ்பியாக உள்ள ஸ்ரேஷா குப்தா, பூக்கடை துணை கமிஷனராகவும், திருநெல்வேலி நகர கிழக்கு துணை கமிஷனர் சீனிவாசன், சென்னை நிர்வாகப் பிரிவு துணை கமிஷனராகவும், சென்னை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக உள்ள ஹர்ஸ் சிங், நாகப்பட்டினம் எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த ஜவகர், ஈரோடு எஸ்பியாகவும், அங்கு எஸ்பியாக இருந்த சசிமோகன், க்யூ பிரிவு எஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன், சென்னை வடக்கு போக்குவரத்து துணை கமிஷனராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் எஸ்பியாக இருந்த ராஜேஷ் கண்ணன், நாமக்கல் எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த கலைச்செல்வன், மாநில குற்ற ஆவணக் காப்பக எஸ்பியாகவும், செங்குன்றம் துணை கமிஷனராக இருந்த (ஆவடி கமிஷனரகம்), மணிவண்ணன், வேலூர் எஸ்பியாகவும், மதுரை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த சாய் பிரனீத், செங்கல்பட்டு எஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பிரதீப், மதுரை தெற்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராகவும், திருச்சி தெற்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் தேவி, சிபிசிஐடி சைபர்செல் எஸ்பியாகவும், கமாண்டோ படை எஸ்பியாக இருந்த செல்வக்குமார், திருச்சி தெற்கு நகர துணை கமிஷனராகவும், திருப்பத்தூர் எஸ்பி பாலகிருஷ்ணன், ரெட்ஹில்ஸ் துணை கமிஷனராகவும், ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு உளவுப் பிரிவு எஸ்பி ராஜேந்திரன், விஐபிக்கள் செக்யூரிட்டி எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விஐபிக்கள் செக்யூரிட்டிப் பிரிவு எஸ்பி சாமிநாதன், திருப்பூர் எஸ்பியாகவும், இந்த மாவட்ட எஸ்பி செஷாங் சாய், விழுப்புரம் எஸ்பியாகவும், சிபிசிஐடி சைபர் செல் எஸ்பி அருண் பாலகோபாலன், தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்பியாகவும், உளவுப்பிரிவு எஸ்பி சரவணன், ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு உளவுப் பிரிவு எஸ்பி பதவியை கூடுதலாகவும், சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறை எஸ்பி தீபா சத்யன், போலீஸ் அகாடமி நிர்வாகப் பிரிவு எஸ்பியாகவும், கிருஷ்ணகிரி மாவட்டம் பேச்சம்பள்ளி பட்டாலியன் எஸ்பி பாண்டியராஜன், மதுவிலக்கு அமலாக்கத்துறை உளவுப்பிரிவுவுக்கும் அந்தப் பதவியில் இருந்த எஸ்பி ஜெயந்தி, கிருஷ்ணகிரி மாவட்டம் பேச்சம்பள்ளி பட்டாலியன் எஸ்பியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உளவுப் பிரிவு கூடுதல் எஸ்பி சரவணகுமார், பதவி உயர்வு பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை தெற்கு மண்டல எஸ்பியாகவும், கடலூர் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்பி பொன் கார்த்திக்குமார், பொருளாதாரக் குற்றப்பிரிவு எஸ்பியாகவும், காஞ்சிபுரம் தலைமையிட கூடுதல் எஸ்பி வினோத் சாந்தாராம், சிபிசிஐடி சிறப்பு பிரிவு எஸ்பியாகவும், கள்ளக்குறிச்சி பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்பி விஜய் கார்த்திக் ராஜ், பதவி உயர்வு பெற்று சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறை எஸ்பியாகவும், கரூர் சைபர் கிரைம் கூடுதல் எஸ்பி கீதாஞ்சலி, சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை கமிஷனராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
தாம்பரம் நகர தலைமையிட கூடுதல் துணை கமிஷனர் காமினி, சிவில் சப்ளை சிஐடி ஐஜியாகவும், ஆயுதப்படை ஐஜி ராதிகா, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஐஜியாகவும், வடசென்னை கூடுதல் துணை கமிஷனர் அன்பு, சிபிசிஐடி ஐஜியாகவும், சென்னை நகர தலைமையிட துணை கமிஷனர் லோகநாதன், வட சென்னை கூடுதல் கமிஷனர் பதவியை கூடுதலாகவும் கவனிப்பார். ஆவடி தலைமையிட கூடுதல் கமிஷனர் நஜ்மல் ஹோடா, காவலர் நலன் பிரிவு ஐஜியாகவும், பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜி ரூபேஷ்குமார் மீனா, சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய ஐஜியாகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் உள்துறைச் செயலாளர் அமுதா கூறியுள்ளார். இந்த பணியிட மாறுதலில் 4 ஏடிஜிபிக்கள் டிஜிபிக்களாகவும், 5 கூடுதல் எஸ்பிக்கள், எஸ்பிக்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதைத் தவிர 8 மாவட்ட எஸ்பிக்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
The post 8 மாவட்டங்களுக்கு புதிய எஸ்பிக்கள் 39 போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: ஆவடி போலீஸ் கமிஷனராக அருண் நியமனம் appeared first on Dinakaran.
