×

தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டுத் திடலை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்தார் மேயர் பிரியா

சென்னை: சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டுத் திடலை மேம்படுத்துவது குறித்து மேயர் பிரியா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் மாநகரில் சுற்றுச்சூழலை பேணிகாக்கவும், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காகவும் 786 பூங்காக்கள், 104 சாலை மையத்தடுப்புகள், 113 போக்குவரத்து தீவுத்திட்டுகள் மற்றும் 163 சாலையோர பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னை மாநகராட்சி அரங்கத்துறையின்கீழ் 222 விளையாட்டு திடல்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்களை மேம்படுத்தும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-111க்குட்பட்ட கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டுத் திடலை மேம்படுத்துவது குறித்து மேயர் பிரியா இன்று (19.05.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த விளையாட்டுத் திடல் 17,658 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் 6187 சதுர மீட்டர் பரப்பளவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் குத்துச்சண்டை மைதானம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 11,470 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபாதை, கழிப்பறை மற்றும் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட உள்ளது.

இந்த விளையாட்டுத் திடலை ஆய்வு செய்த மேயர் பழுதடைந்த உடற்பயிற்சிக் கூடக் கட்டடத்தை உடனடியாக இடித்து அப்புறப்படுத்தி, புதிய உடற்பயிற்சிக் கூடத்தை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினர் நந்தினி மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

The post தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டுத் திடலை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்தார் மேயர் பிரியா appeared first on Dinakaran.

Tags : Mayor Priya ,Gobalapuram Corporation ,Tenampet Zone ,Chennai ,Chennai Corporation ,Gobalapuram ,Tenambetta Zone ,
× RELATED கால்வாய்கள், நீர்நிலைகளில் டிரோன்கள்...