கேரளா: கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் ரயில் திடீரென தீப்பிடித்ததால் எவ்வாறு எதிர்கொண்டு பயணிகளை மீட்பது தொடர்பான ஒத்திகையை பேரிடர் மீட்பு குழுவினர் செயல் வடிவில் நிகழ்த்தி காட்டினர். எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ரயில்வே பணிமனையில் இந்த ஒத்திகையானது நடைபெற்றது. இதனை ரயில்வே நிர்வாகம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.
அரக்கோணம்- திருச்சூர் இடையே பயணித்த பயணிகள் ரயில் திடீரென தடம் புரண்டு அதன் ஒரு பெட்டி தீ பிடித்தது குறித்து தகவலறிந்தும் தீயணைப்பு துறையினர் எப்படி சம்பவ இடம் விரைகின்றனர். ரயிலில் சிக்கிய பயணிகள் எவ்வாறு மீட்கப்பட்டு நெருப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. என்பது செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் சேதமடைந்த ரயில் பெட்டி கிரேன் மூலம் தண்டவாளத்தில் நிறுத்தப்படுவதையும் நிகழ்த்தி காட்டி இருந்தனர். தொடர்ந்து ரயில் விபத்து தொடர்பாக விரிவான விளக்கமும் விவரிக்கப்பட்டது.
The post எர்ணாகுளத்தில் ரயில் விபத்து ஒத்திகையில் ஈடுபட்ட வீரர்கள்: தேசிய பேரிடர் மீட்பு படை, ரயில்வே ஊழியர்கள் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.
