×

ரஷ்ய வைரங்களுக்கு தடை: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அதிரடி அறிவிப்பு..!!

இங்கிலாந்து: உக்ரைன், ரஷ்ய போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்ய வைரங்களை இங்கிலாந்து தடை செய்துள்ளது. ரஷ்யாவிலிருந்து தாமிரம், அலுமினியம், நிக்கல் உள்ளிட்ட உலோகங்கள் மற்றும் ரஷ்ய வைரங்களை இறக்குமதி செய்வதை தடை செய்வதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். அனைத்து வகையான பொருளாதார தடைகளையும் சமாளிக்க பிரிட்டன் ஜி 7 உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து தொடர்ந்து பணியாற்றி வருவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

ஜி7 நாடுகள் உக்ரைனுடன் துணை நிற்பதை ரஷ்யாவிற்கு காட்ட விரும்புவதாக இந்திய வம்சாவளி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எப்போதும் அமைதி மற்றும் உலக பொருளாதார பாதுகாப்பை ஊக்குவிப்பதில் தான் ஜி7 கவனம் செலுத்துவதாகவும் ஜி7 நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக நின்று இந்தோ- பசுபிக் பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதை புட்டனுக்கு காட்ட வேண்டும் எனவும் ரிஷி சுனக் தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

The post ரஷ்ய வைரங்களுக்கு தடை: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அதிரடி அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : UK ,Rishi Sunak ,Ukraine ,Russian war ,Russia ,Dinakaran ,
× RELATED அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி...