×

தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலி பணியிடம்

தூத்துக்குடி, மே 19: தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில்,சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. அதில் பணிபுரிய கீழ்கண்ட நிலைகளில் தகுதியுள்ள பணியாளர் தேர்வு செய்யப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கீழ்கண்ட பணியிடத்திற்கு தகுதியானோர் தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் தங்கள் சுயவிவரங்களுடன் வரும் மே 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வழக்கு பணியாளர் தகுதி மற்றும் அனுபவம்: வழக்கு பணியாளர் இளநிலை பட்டம், ஆலோசனை உளவியல், அல்லது வளர்ச்சி முகாமைத்துவம் போன்ற படிப்புகளுடன் குறைந்தது 1 வருடம் அனுபவம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான நிறுவனத்தில் அரசு அல்லது அரசு சாரா நிறுவனத்தில் அல்லது பெண்கள் சார்ந்த முன்னுரிமைத் திட்டத்தில் 1 வருடம் ஏதேனும் பெண்கள் ஆலோசனை மையத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும். முதுநிலை பட்டதாரிகளும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு பெண் மட்டும் விண்ணப்பம் செய்ய வேண்டும். பணி தொடர்பான பயணப்படி வழங்கப்படும். உள்ளுரில் வசிப்பவருக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும். மாத சம்பளம் 12 ஆயிரம் ஆகும். மொத்த பணியிடம் 1 ஆகும். இத்தகவலை கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

The post தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலி பணியிடம் appeared first on Dinakaran.

Tags : Tuticorin District Integrated Service Center Vacancy ,Thoothukudi ,Thoothukudi district ,Thoothukudi District Integrated Service Center ,Dinakaran ,
× RELATED காரில் வந்தவரிடம் ரூ.9 லட்சம் பறிப்பு எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்