×

வீட்டு மனை பட்டா வழங்க கோரி உழைப்போர் உரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை,மே 19: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தரங்கம்பாடி தாலுகா இளையாளூர் ஊராட்சி புதுத்தெருவைச் சேர்ந்த நூறு குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வீரசெல்வம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சங்கர், மேனகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அமைப்பின் மாநில இணை பொது செயலாளர் வக்கீல் பாரதி, மாநில துணை தலைவர் சண்முகவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, இளையாளூர் ஊராட்சியில் நீர்நிலைகள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் 100 குடும்பங்களுக்கு அரசு சார்பில் வீட்டுமனை பட்டா வழங்க கோரி முழக்கங்கள் எழுப்பினர். இதில் உழைப்போர் உரிமை இயக்கம் நிர்வாகிகள் மற்றும் இளையாளூர் ஊராட்சி புதுத்தெரு பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தனித்தனியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தனர்.

The post வீட்டு மனை பட்டா வழங்க கோரி உழைப்போர் உரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Tharangambadi taluka ,Ilayalur Panchayat Pudutheru ,
× RELATED மயிலாடுதுறையில் திடீர் பரபரப்பு உயர்...