×

கூடலூர் கல்லூரியில் கணித பாடப்பிரிவை மீண்டும் துவக்க எம்பி ஆ. ராசா வலியுறுத்தல்

 

ஊட்டி, மே 19: நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ. ராசா, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கூடலூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் கணித பாடப்பிரிவு நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள், மக்கள் மத்தியில் அரசின் மீது அதிருப்தி நிலவுகிறது. தோட்டத்தொழிலாளர்கள், கூலித்தொழிலாளர்கள், ஏழை மக்களின் நலன் கருதி, அவர்களது குழந்தைகள் பயிலும் வகையில் கணித பாடப் பிரிவை மீண்டும் இந்த கல்வி ஆண்டிலேயே கொண்டு வந்து உதவிட வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

The post கூடலூர் கல்லூரியில் கணித பாடப்பிரிவை மீண்டும் துவக்க எம்பி ஆ. ராசா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : MB ,Kudalur College ,Rasa ,Ooty ,Nilgiris Lok Sabha ,B. Raza ,Higher ,Minister ,Ponmudi ,Dinakaran ,
× RELATED அதிமுக செய்த தவறுகளுக்காக தண்டனை...