×

ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து வந்த சென்னை கப்பலில் தீக்காயம் 2 இந்திய ஊழியர்கள் மீட்பு

கொச்சி: ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து சென்னை வந்த வணிக கப்பலில் தீக்காயம் அடைந்த 2 இந்திய ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஐக்கிய அரசு எமிரேட்ஸில் இருந்து சென்னைக்கு எம்டி சாண்டே என்ற வணிக கப்பல் வந்து கொண்டு இருந்தது. கொச்சி கடற்கரை பகுதியில் வந்த போது அந்த கப்பலில் இன்ஜின் அறையில் பணிபுரியும் இந்திய ஊழியர்கள் ஆம்ப்ரோஸ் ஆண்டனி (48), பிரதீப் ஜெய்ஸ்வால் (32) ஆகியோர் தீக்காயம் அடைந்தனர்.

இதுபற்றி கப்பல் நிர்வாகம் மும்பையில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் கொடுத்தது. அவர்கள் தெரிவித்த தகவல் அடிப்படையில் கடலோர காவல்படை தேவையான அனுமதி பெற்று வெளிநாட்டு வணிக கப்பலுக்கு மருத்துவ குழுவுடன் சென்று ஆய்வு செய்தது. தொடர்ந்து நேற்று கொச்சி கடலோர காவல்படை மையத்திற்கு அவர்கள் 2 பேரும் அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர்.

The post ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து வந்த சென்னை கப்பலில் தீக்காயம் 2 இந்திய ஊழியர்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,UAE ,Kochi ,United Arab Emirates ,
× RELATED அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி...