×

தொழிலாளர்களுடன் எப்போதும் நட்புறவு; உழைக்கும் அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் இயக்கம் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தொமுச பொன்விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய அவர்; உழைக்கும் அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் இயக்கம் திமுக. தொ.மு.ச. பேரவையின் பொன்விழா மாநாடு நமக்கெல்லாம் பெருமைப்படக் கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. தொழிலாளர் அணியுடன் எனக்கு எப்போதுமே, நட்பு கலந்து ஒரு மோதல் உண்டு. மோதல் என்பதை ஊடல் என்று கூட சொல்லலாம். ஊடல் இருந்தாலும் கூடலும் எப்போதுமே இருக்கத்தான் செய்கிறது. 36 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் தி.மு.க ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் தினமான மே முதல் நாளை விடுமுறையாக அறிவித்து மே தின பூங்கா நிறுவியவர் முத்தமிழறிஞர் கலைஞர். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு அரசு. நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைப்பதை உறுதி செய்தவர் கலைஞர்தான். அவரது வழியில் தான் இந்த அரசும் செயல்பட்டு வருகிறது. தொ.மு.ச பேரவை இந்தியாவின் 19 மாநிலங்களில் இணைப்புச் சங்கங்களை உருவாக்கி உள்ளனர். குறிப்பாக ஒடிசா மாநிலத்தில் 40 சங்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

ஒடிசா மாநில அரசு சிறந்த தொழிற்சங்கமாக தொ.மு.சவை தேர்வு செய்து பரிசும் வழங்கி உள்ளது. அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் இயக்கம் திமுக. 36 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான். அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றாமல் சென்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வை, ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே நிறைவேற்றியது திமுக அரசு இவ்வாறு கூறினார்.

The post தொழிலாளர்களுடன் எப்போதும் நட்புறவு; உழைக்கும் அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் இயக்கம் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,Thomusa Golden Jubilee Conference ,CM ,Dinakaran ,
× RELATED 3 ஆண்டுகளை நிறைவு செய்த திமுக அரசு:...