×

கோடை விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: திருப்பதியில் வி.ஐ.பி தரிசனம் ரத்து..!!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறை துவங்கிய பின் கடந்த சில நாட்களாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்காக அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக இன்று திருப்பதி மலையில் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய 36 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் நிரம்பி வழிகிறது. அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் நீள வரிசையில் இலவச தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். இலவச தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகிய வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து வருகிறது.

300 ரூபாய் தரிசனத்திற்கு நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை தற்போது நிலவுகிறது. கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் திருப்பதியில் நாளை முதல் விஐபி தரிசனம் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்பட இருப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

The post கோடை விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: திருப்பதியில் வி.ஐ.பி தரிசனம் ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Tiruppati ,Andhra Pradesh ,Tirupati Elumalayan temple ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...