×

விவாகரத்துக்கு ரூ.1 கோடி கேட்டதால் கூலிப்படையை ஏவி 2வது மனைவியை கொன்ற 71 வயது கணவர் கைது

புதுடெல்லி: டெல்லி, ரஜோரி கார்டன் பகுதியை சேர்ந்தவர் குப்தா (71). இவரது மகன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். இதனால் குப்தா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை 2வது திருமணம் செய்தார். திருமணம் முடிந்த பின்பு அந்த பெண், குப்தாவின் மகனை கவனிக்க மறுத்தார். இதனால் குப்தா மனம் உடைந்தார். அதனால் 2வது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். இதற்காக பேச்சு நடத்திய போது ரூ.1 கோடி பணம் தர வேண்டும் என்றார். இதனை கேட்ட குப்தா ஆத்திரமடைந்தார். மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக கூலிப்படையான டெல்லியை சேர்ந்த விபின், ஹிமாண்டி ஆகியோரை சந்தித்து பேசினார்.

அவர்கள், குப்தாவின் மனைவியை கொலை செய்ய ரூ.10 லட்சம் கேட்டனர். முன்பணமாக ரூ.2.40 லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்ற கூலிப்படையினர், குப்தாவின் 2வது மனைவியை கொலை செய்தனர். தகவலறிந்த போலீசார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குப்தாவை கைது செய்தனர். அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையினர் விபின், ஹிமாண்டி ஆகியோரும் பிடிப்பட்டனர். அவரகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post விவாகரத்துக்கு ரூ.1 கோடி கேட்டதால் கூலிப்படையை ஏவி 2வது மனைவியை கொன்ற 71 வயது கணவர் கைது appeared first on Dinakaran.

Tags : Manceer ,Gupta ,Rajori Garden, New Delhi ,Delhi ,Mancer ,Avie ,
× RELATED பாரம்பரிய உணவுத் திருவிழா