×

நிதி நிறுவனத்தில் ரூ1300 கோடி மோசடி: முதலீடு செய்த 76 ஆயிரம் பேரின் விவரம் சேகரிக்கிறது தனிப்படை

கோவை: கோவை பீளமேட்டில் தனியார் நிதி நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சூலூரை சேர்ந்த ரமேஷ் (30). இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.10 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும். 20 மாதங்களுக்கு பின் முதலீட்டு தொகை திரும்ப அளிக்கப்படும். ரூ.1 லட்சத்தை வைப்பு நிதியாக செலுத்தினால் 1 ஆண்டு முடிவில் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இதனை நம்பி அந்த நிறுவனத்தில் 76 ஆயிரம் பேர் முதலீடு செய்தனர். அவர்கள் செலுத்திய முதலீட்டு தொகை மொத்தம் ரூ.1300 கோடி என கூறப்படுகிறது. ஆனால் இந்த நிறுவனத்தினர் சொன்னபடி வட்டி மற்றும் முதலீடு தொகையை முதலீட்டாளர்களுக்கு திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பலர் அளித்த புகாரின் அடிப்படையில், டிஎஸ்பி முருகானந்தம் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறனர்.

இது குறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், மோசடி தொடர்பாக இதுவரை 31 பேர் மட்டுமே புகார் அளித்துள்ளனர். எனவே அந்த நிறுவனத்தில் முதலீடு செய்த 76 ஆயிரம் பேரின் விபரங்களை சேகரித்து வருகிறோம். அவர்களது பெயர், முகவரி மற்றும் முதலீடு செய்து ஏமாந்த தொகை எவ்வளவு? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

The post நிதி நிறுவனத்தில் ரூ1300 கோடி மோசடி: முதலீடு செய்த 76 ஆயிரம் பேரின் விவரம் சேகரிக்கிறது தனிப்படை appeared first on Dinakaran.

Tags : COVI ,Private Finance Institute ,Gov Bealumate ,Solurai ,Dinakaran ,
× RELATED மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி...