நெல்லை, மே 18: நெல்லை சந்திப்பில் அரசு பணியாளர் சங்க கட்டிட அறைகளை கடப்பாரை கொண்டு உடைத்தும் சேதப்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை சந்திப்பிலுள்ள தேவர் சிலை அருகிலுள்ள நெல்லை மாவட்ட அரசு பணியாளர் சங்க கட்டிடத்தில் சரிவர வாடகை பாக்கி செலுத்தாத காரணத்தால் அதன் தலைவரான பாளையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (53) என்பவர் வி.எம் சத்திரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (60) என்பவரது அறையை பூட்டினார். இதுகுறித்து தெரியவந்ததும் ஆவேசமைடந்த பாலகிருஷ்ணன், நேற்று முன்தினம் (15ம் தேதி) அங்கு வந்து கடப்பாறையால் சங்க கட்டிட அறைக்கதவை உடைத்தார். மேலும் சுவரை சேதப்படுத்தியதோடு அங்குள்ள உறுப்பினர்களையும் அச்சுறுத்தி சென்றார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த நெல்லை சந்திப்பு எஸ்ஐ சுவாதிகா மற்றும் போலீசார், பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
The post அரசு பணியாளர் சங்க கட்டிடத்தை கடப்பாறையால் சேதப்படுத்திய முதியவர் கைது appeared first on Dinakaran.
