×

மே 21ம் தேதி முதல் ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா ஆர்டிஓ தலைமையில் ஆலோசனை

 

கீழக்கரை, மே 18:ஏர்வாடி தர்ஹாவில் சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா மே 21ம் தேதி மாலை மவுலீது உடன் துவங்குகிறது. மே 31ம் தேதி மாலை கொடியேற்றப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, ஜூன் 12ம் தேதி மாலை துவங்கும் சந்தனக்கூடு திருவிழாவில், ஜூன் 13 அதிகாலை மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இத்திருவிழா தொடர்பாக கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ராமநாதபுரம் ஆர்டிஓ கோபு தலைமை வகித்தார்.

போலீஸ் டிஎஸ்பி சுதிர்லால், தாசில்தார் பழனிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு மே 31 முதல் ஜூன் 13 வரை முக்கிய இடங்களில் ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஏர்வாடி நகர் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுகாதாரம் பேண வேண்டும். பக்தர்களுக்கு எவ்வித இடையூறின்றி வாகனங்கள் வந்து செல்ல வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் விதிமுறைகளுக்கு தர்ஹா கமிட்டி உள்பட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

இதில், ஹக்தார் நிர்வாக சபை தலைவர் முகமது பாக்கீர் சுல்தான், செயலாளர் செய்யது சிராஜுதீன், உதவி தலைவர் சாதிக்பாட்ஷா மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள், ஏர்வாடி ஊராட்சி தலைவர் செய்யது அப்பாஸ், கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ், கடலாடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகவேல், ஜோதி மாணிக்கம், சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை உள்பட பலர் பங்கேற்றனர்.

The post மே 21ம் தேதி முதல் ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா ஆர்டிஓ தலைமையில் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Airwadi Chandanakudu festival ,RTO ,Bottom ,Chandanadi Festival of Social Harmony ,Erwadi Dharha ,Maulithu ,Airwadi Chandanadu festival ,
× RELATED புதிய செயலி மூலம் வாகன புகை பரிசோதனை சான்று