×

9 மாநிலங்களில் 324 இடங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி: போதைப்பொருள் கடத்தல், தீவிரவாதிகள், குண்டர்களுடன் தொடர்பு குறித்த வழக்குகள் தொடர்பாக 9 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். வடமாநிலங்களில் கொலைகள் மற்றும் வன்முறை குற்றச்செயல்களில் ஈடுபடும் கிரிமினல் கும்பல்களுக்கு வெளிநாடுகளில் இருக்கும் தீவிரவாத அமைப்புக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆதரவாக செயல்படுவது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) கடந்த ஆண்டு மூன்று வழக்குகளை பதிவு செய்து இருந்தது.

இந்நிலையில் வடமாநிலங்களில் தீவிரவாதம், போதைப்பொருள் மற்றும் கடத்தல் கும்பலின் தொடர்பு குறித்து மாநில காவல்துறையுடன் இணைந்து என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தீவிரவாதத்தை பரப்புவதற்கு வெளிநாட்டு தீவிரவாத குழுக்கள் நிதியுதவி அளித்தது தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் உட்பட 9 மாநிலங்களில் 324 இடங்களில் நேற்று சோதனை
நடத்தப்பட்டது.

The post 9 மாநிலங்களில் 324 இடங்களில் என்ஐஏ சோதனை appeared first on Dinakaran.

Tags : NIA ,New Delhi ,National Intelligence Agency ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு