×

பிரதமர் மோடியின் ஆஸ்திரேலியா பயணத்தில் மாற்றம் இல்லை

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவில் அடுத்த வாரம் நடைபெற இருந்த குவாட் தலைவர்களின் உச்சிமாநாடு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், பிரதமர் மோடியின் ஆஸ்திரேலிய பயணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியின் வெளிநாடு பயணம் குறித்து செவ்வாயன்று வெளியுறவு துறை அமைச்சகம் அறிவித்தது. இதன்படி பிரதமர் மோடி 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்கிறார். இதனை தொடர்ந்து 22ம் தேதி பப்புவா நியூகினியா செல்லும் பிரதமர் மோடி அங்கு இந்தியா-பசிபிக் தீவுகளின் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். பின்னர் 22 முதல் 24ம் தேதி வரை பிரதமர் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். குவாட் மாநாடு ரத்து செய்யப்பட்டாலும் பிரதமரின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மாற்றம் செய்யப்படவில்லை.

The post பிரதமர் மோடியின் ஆஸ்திரேலியா பயணத்தில் மாற்றம் இல்லை appeared first on Dinakaran.

Tags : Prime Minister Modi ,Australia ,New Delhi ,Modi ,Dinakaran ,
× RELATED ராமர் இந்தியாவின் நம்பிக்கை, ராமர்...