×

கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அலைய விடாமல் அனுமதி: ஐகோர்ட்

மதுரை: கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அலையவிடாமல் அனுமதி வழங்க வேண்டுமென ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையின் எல்லைக்கு உட்பட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆடல்-பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள், கபடி போட்டி உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை நேற்று விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி விக்டோரியா கவுரி ஆகியோர், ‘‘கிராம திருவிழாக்களின்போது நடத்தப்படும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி காவல் நிலையங்களில் கிராமத்தினர் மனுக்கள் அளிக்கும் போது தாமதிக்காமல் அனுமதி வழங்க வேண்டும். உயர்நீதிமன்றம் சென்று உத்தரவு வாங்கி வர வேண்டுமென அலையவிடக் கூடாது’’ என அறிவுறுத்தி, நேற்று விசாரணைக்கு வந்த பெரும்பாலான மனுக்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

The post கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அலைய விடாமல் அனுமதி: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : iCort. ,Madurai ,iCort ,Igort Madurai ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை