×

சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் பலி

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கிழக்கு மிட்னாபூரில் உள்ள எக்ராவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து கிழக்கு மிட்னாபூர் எஸ்பி அமர்நாத் கூறுகையில், ‘குடியிருப்பு கட்டிடத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு தொழிற்சாலையில் நடந்த ெவடிவிபத்து சம்பவத்தில் இதுவரை 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. வெடிவிபத்தால் கட்டிடம் இடிந்து விழுந்தது.

பட்டாசு ஆலையின் உரிமையாளர் தலைமறைவாக உள்ளதால் அவரை தேடி வருகிறோம். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார். இதனிடையே மேற்கண்ட வெடிவிபத்து சம்பவம் குறித்து, மாநில சிஐடி போலீசாரின் விசாரணைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

The post சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Kolkata ,Ekra ,eastern Midnapur ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு மதிப்பெண் முறைகேடு...