×

திருப்பதியில் ஒரே நாளில் ரூ3.77 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் வருகை திருமலைக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையொட்டி ஒரேநாளில் மொத்தம் 77,436 பக்தர்கள் தரிசித்தனர்.

38,980 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. அதில் ரூ3.77 கோடி காணிக்கை கிடைத்தது. இன்று வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 30 அறைகள் நிரம்பி கிருஷ்ணா தேஜா தங்கும் விடுதி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் 24 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

The post திருப்பதியில் ஒரே நாளில் ரூ3.77 கோடி காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruppati Thirumalai ,Tirupati Ethumalayan ,Tirupati ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை..!!