×

அணு மின்நிலையங்களில் 4374 இடங்கள்; ஐடிஐ/டிப்ளமோ/பிஎஸ்சி படித்தவர்களுக்கு வாய்ப்பு

பணியிடங்கள் விவரம்:

1. Technical Officer/C: 181 இடங்கள். சம்பளம்: ரூ.56,000. வயது : 18 முதல் 35க்குள். தகுதி: ஏதேனும் ஒரு அறிவியல் பாடத்தில் எம்.எஸ்சி அல்லது காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பொறியியல் பிரிவில் பி.இ.,/பி.டெக்.,
2. Scientific Assistant/B: 7 இடங்கள். சம்பளம்: ரூ.35,400. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் பி.எஸ்சி.,
3. Technician/B: 24 இடங்கள். சம்பளம்: ரூ.21,700. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பாய்லர் அட்டெண்ட் பணிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
4. Stipendiary Trainee (Category-I): 1216 இடங்கள். சம்பளம்: ரூ.24,000-26,000. வயது: 19 முதல் 24க்குள். தகுதி: அறிவியல் பாடத்தில் பிஎஸ்சியும், பொறியியல் பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங்கும் முடித்திருக்க வேண்டும்.
5. Stipendiary Trainee (Category-II): 2946 இடங்கள். சம்பளம்: ரூ.20,000-22,000. வயது: 18 முதல் 22க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ படித்திருக்க வேண்டும். Plant Operator/Lab Technician/Dental Technician ஆகிய பணிகளுக்கு கணித பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: டெக்னிக்கல் ஆபீசர் பணிக்கு- ரூ.500, சயின்டிபிக் அசிஸ்டென்டுக்கு ₹150/-, டெக்னீசியன்/பி பணிக்கு ₹100/-, ஸ்டைபண்டரி டிரெய்னீ (கேட்டகிரி-1) பணிக்கு ₹150/-, ஸ்டைபண்டரி டிரெய்னீ (கேட்டகிரி-2) பணிக்கு ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

ஆன்லைனில் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும். துறைவாரியான காலியிடங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.www.barconlineexam.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.05.2023.

The post அணு மின்நிலையங்களில் 4374 இடங்கள்; ஐடிஐ/டிப்ளமோ/பிஎஸ்சி படித்தவர்களுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : PSC ,IDI ,
× RELATED தேனியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி